யாழ்ப்பாணத்தில் கடலில் விழுந்து மீனவர் காணாமல் போயுள்ளார்!

யாழ்ப்பாணத்தில் கடலில் விழுந்து மீனவர் காணாமல் போயுள்ளார்!

காரைநகர் கடற்பரப்பில் படகில் இருந்து தவறி விழுந்த மீனவரைத் தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. காணாமல் போனவர் ஊர்காவற்துறை பகுதியைச் சேர்ந்த கந்தராசா துஷாகரன் (வயது 36) என்பவராவாா்.

: இவர் குருநகர் பகுதியில் இருந்து மற்ற மீனவர்களுடன் இணைந்து படகில் மீன்பிடிக்கச் சென்றுள்ளார். காரைநகர் கடற்பகுதியை நோக்கிப் படகு சென்று கொண்டிருந்த போது, படகின் முன்பகுதியான அணியத்தில் (Bow) அமர்ந்திருந்த இவர், எதிர்பாராதவிதமாகத் தவறி கடலினுள் விழுந்துள்ளார்.

 

அவர் கடலில் விழுந்ததும் சக தொழிலாளர்கள் உடனடியாகத் தேடுதல் நடத்தியுள்ளனர். இருப்பினும் அவர் கடலில் மூழ்கிக் காணாமல் போயுள்ளார்.

தற்போது வரை சக மீனவர்கள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து அவரைத் தேடும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாகக் கடற்படையினருக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

Recommended For You

About the Author: admin