பெண்களின் கருவை வலிமை பெற செய்யும் கீரை

மணத்தக்காளி கீரை கரு வலிமை பெறுவதோடு உடல் குளிர்ச்சியடையவும் உதவுகிறது.

மணத்தக்காளி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வர உடல் உள்ளுறுப்புகளில் ஏற்பட்டிருக்கும் புண்கள் குணமாவதுடன் இருதயத்தின் செயல்பாட்டை அதிகரித்து களைப்பை நீக்கி நல்ல உறக்கத்தைக் கொடுக்கும்.

நன்மை

மணத்தக்காளியானது மலச்சிக்கலிலிருந்து நிவாரணம் அளிப்பதுடன். கண்பார்வை தெளிவு பெற்று வயிற்றில் உள்ள பூச்சிகளை வெளியேற்றும் தன்மை கொண்டது.

அக் கீரையை சமைத்துச் சாப்பிட்டு வருவதால் இருமல், இளைப்பு பிரச்னை குணமாவதுடன் சிறுநீர், வியர்வையைப் பெருக்கி உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றும்.

கீரையுடன் தேங்காய் சேர்த்து கூட்டு போல செய்து சாப்பிட்டு வந்தால் குடல் புண், மற்றும் சிறுநீர்ப்பை எரிச்சல் போன்ற பிரச்சனைகள் நீங்கும். உடற்சூடு அதிகம் கொண்டவர்கள் மணத்தக்காளி கீரையை உணவில் சேர்த்து கொண்டால் உடற்சூடு குறையும்.

மணத்தக்காளி வற்றலானது வாந்தியைப் போக்கி பசியை ஏற்படுத்தும். மேலும் காச நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மணத்தக்காளி பழத்தை சாப்பிடுவது நல்லது.

Recommended For You

About the Author: webeditor