அரச உத்தியோகஸ்தர்கள் மீது நம்பிக்கையில்லா காரணத்தால் தான் பிரஜா சக்தி உருவாக்கப்பட்டது
பருத்தித்துறை பிரதேச சபையின் நேற்றைய (ஜனவரி 28, 2026) மாதாந்த அமர்வில், “பிரஜா சக்தி” (Praja Shakthi) விவகாரம் தொடர்பாக தேசிய மக்கள் சக்தி (NPP) உறுப்பினர் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையையும் அமளியையும் ஏற்படுத்தியுள்ளது.
அரச உத்தியோகஸ்தர்களைக் கண்காணிப்பதற்கே பிரஜா சக்தி உருவாக்கப்பட்டது என NPP உறுப்பினர் கூறிய கருத்துக்கு சபையில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.
இந்தக் கருத்தால் ஆத்திரமடைந்த தவிசாளர் யுகதீஸ் மற்றும் ஏனைய உறுப்பினர்கள், அரச அதிகாரிகளை அவமதிக்கும் வகையில் இது அமைந்துள்ளதாகக் கூறி கடும் கண்டனத்தைப் பதிவு செய்தனர்.
பிரஜா சக்திக்கு எதிராகத் தவிசாளரால் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் ஆதரவாக (10): இலங்கைத் தமிழரசுக் கட்சி (09), ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (01) வாக்குகளும்
எதிராக (04): தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் வாக்குகளும் வழங்கப்பட்டன. நடுநிலையாக (05): ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணி (04), சுயேச்சைக் குழு (01). இருந்தனா்.
.தனால் பெரும்பான்மை வாக்குகளால் பிரஜா சக்திக்கு எதிரான தீர்மானம் சபையில் நிறைவேற்றப்பட்டது.
அரச நிர்வாகப் பணிகளில் “பிரஜா சக்தி” போன்ற குழுக்களின் தலையீடு அதிகாரிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்தத் தீர்மானம் முக்கியத்துவம் பெறுகிறது.

