டிரம்பிற்கு வந்த சோதனை – அமெரிக்க ஜனாதிபதியை பதவியிலிருந்து நீக்கக் கோரிக்கை!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை அரசியலமைப்பின் 25-வது திருத்தத்தின் (25th Amendment) கீழ் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று அமெரிக்க செனட்டர் அதிகாரப்பூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளார்.
📌 சமீபகாலமாக அதிபர் டிரம்பின் சில அதிரடி முடிவுகள் மற்றும் நிர்வாகக் செயல்பாடுகள் குறித்து எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, சில தரப்பினரிடையேயும் அதிருப்தி நிலவி வருகிறது. குறிப்பாக கிரீன்லாந்தை இணைப்பது தொடர்பான அவரது பிடிவாதமான நிலைப்பாடு மற்றும் அது சார்ந்த கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. மேலும் ஜனாதிபதி தனது பணிகளைச் சரியாகச் செய்ய இயலாத நிலையில் இருப்பதாகக் கூறி, மசாசூசெட்ஸ் செனட்டர் எட் மார்க்கி (Ed Markey) உள்ளிட்ட தலைவர்கள் 25-வது திருத்தத்தை அமல்படுத்த வலியுறுத்தி வருகின்றனர்.
⚖️ அமெரிக்க அரசியலமைப்பின் 25-வது திருத்தத்தின் 4-வது பிரிவு, ஒரு ஜனாதிபதி தனது கடமைகளையும் அதிகாரங்களையும் செலுத்த இயலாத நிலையில் இருப்பதாக துணை ஜனாதிபதி மற்றும் அமைச்சரவையின் பெரும்பான்மையினர் கருதினால், அவரைப் பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்க வழிவகை செய்கிறது. இது அமெரிக்க வரலாற்றில் இதுவரை ஜனாதிபதியை நீக்கப் பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
🔍 ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் பலர் ஜனாதிபதியின் மனநிலை மற்றும் உடல்நிலை குறித்துக் கவலை தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி டிரம்ப் தரப்பு இந்தக் குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்துள்ளதுடன், இது அரசியல் காழ்ப்புணர்ச்சி என்று விமர்சித்துள்ளது. அதே வேளையில், அமைச்சரவை உறுப்பினர்கள் இதற்கு ஒத்துழைப்பார்களா என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.
அமெரிக்க அரசியலில் இது ஒரு மிகப்பெரிய திருப்பமாகப் பார்க்கப்படுகிறது. வரும் நாட்களில் இது குறித்த மேலதிக விவாதங்கள் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


