இங்கிலாந்து அணிக்கு எதிரான இலங்கை அணி அறிவிப்பு..!
2026 ஆம் ஆண்டுக்கான இங்கிலாந்து அணியின் இலங்கைச் சுற்றுப்பயணத்தின் ஒருநாள் சர்வதேச (ODI) போட்டித் தொடருக்கான இலங்கைக் குழாமை இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழு இன்று (21) அறிவித்துள்ளது.
இந்தத் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணியின் தலைவராக சரித் அசலங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டிகள் எதிர்வரும் ஜனவரி 22, 24 மற்றும் 27 ஆகிய திகதிகளில் கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளன.
அறிவிக்கப்பட்டுள்ள 17 பேர் கொண்ட இலங்கைக் குழாம் விபரம் வருமாறு:
சரித் அசலங்க (அணித்தலைவர்)
பெத்தும் நிஸ்ஸங்க
கமில் மிஷார
குசல் மெந்திஸ்
சதீர சமரவிக்ரம
பவன் ரத்நாயக்க
தனஞ்சய டி சில்வா
ஜனித் லியனகே
கமிந்து மெந்திஸ்
துனித் வெல்லாலகே
வனிந்து ஹசரங்க
ஜெஃப்ரி வெண்டர்சே
மஹீஷ் தீக்ஷன
மிலான் ரத்நாயக்க
அசித பெர்னாண்டோ
பிரமோத் மதுஷான்
எஷான் மாலிங்க

