நுவரெலியாவில் மோட்டார் சைக்கிள் லொறி மோதி விபத்து – ஒருவர் படுகாயம்.!!

நுவரெலியாவில் மோட்டார் சைக்கிள் லொறி மோதி விபத்து – ஒருவர் படுகாயம்.!!

நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் வேண்டிகோனர் சந்தி (11) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்களுடன் லொறி மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது இதில் மோட்டார் சைக்கிள் சாரதி படுகாயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

நுவரெலியா பொரளாந்த பகுதியில்இருந்து ஹட்டன் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் எதிர் திசையில் ஹட்டன் பகுதியில் இருந்து நுவரெலியா பீட்ரு நோக்கி சென்று கொண்டிருந்தது லொறி மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இவ்விபத்து சம்பவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

 

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளும் பலத்த சேதமடைந்துள்ளது. இவ்விபத்து தொடர்பான விசாரணையை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin