றஹ்மானியா மையவாடியை ஒளியூட்டிய பிரதேச சபை உறுப்பினர்..!
கடந்த எட்டு வருடங்களாக றஹ்மானியா மையவாடியை ஒளியூட்டி வெளிச்சகரமாக வைத்திருக்கும் விடயத்தில் ஈடுபடும் பிரதேச சபை உறுப்பினர் றணீஸ்.
ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் எம்.என்.எம். றணீஸ் அவர்களினால் மாவடிப்பள்ளி ரஹ்மானியா மையவாடிக்கு கடந்த சில வருடஙகளாக ஒளியூட்டும் அடிப்படையில் புதிய LED மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.
காரைதீவு பிரதேச சபை உறுப்பினராக தனது கடமையினை பொறுப்பெடுத்த தினத்திலிருந்து இன்றுவரை ரஹ்மானியா மையவாடியை வெளிச்சகரமானதாக வைத்திருக்க வேண்டும் எனும் அடிப்படையில் தன்னை தொடர்ந்து ஈடுபடுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. மேலும் இன்றுவரை இம்மையவாடி வளாகத்திற்குள் காணப்படும் அனைத்து மின்கம்பங்களிலும் மின்விளக்குகள் பொருத்தி அதனை ஒளியூட்டிமை குறிப்பிடத்தக்கது.

