பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை..!
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு அபாய எச்சரிக்கை அறிவிப்பை புதுப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த எச்சரிக்கை அறிவிப்பானது இன்று (10) மாலை 4.00 மணி முதல் நாளை (11) மாலை 4.00 மணி வரை அமுலில் இருக்கும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, பின்வரும் பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது:
பதுளை மாவட்டம்: பதுளை, ஹாலிஎல, பசறை, லுணுகல, வெலிமட, மீகஹகிவுல, கந்தகெட்டிய, ஊவா பரணகம.
மாத்தளை மாவட்டம்: அம்பகங்க கோரளை, உக்குவளை, லக்கல பல்லேகம, இரத்தோட்டை, வில்கமுவ.
கண்டி மாவட்டம்: மினிப்பே, உடுதும்புர.
நுவரெலியா மாவட்டம்: நிள்தண்டாஹின்ன, வலப்பனை, மத்துரட்ட, ஹங்குரக்கெத.

