லசந்த விக்ரமதுங்கவின் 17ஆவது நினைவு தினம்: கொழும்பில் அஞ்சலி!
கொழும்பு – சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் 17ஆவது நினைவு தினம் இன்று (08) கொழும்பு பொரளை கனத்தை பொது மயானத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
அவரது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் லசந்தவின் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தியதுடன், மெழுகுவர்த்திகளை ஏற்றி தமது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.
சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றிய லசந்த விக்ரமதுங்க, கடந்த 2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 08ஆம் திகதி இனந்தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். ஒரு துணிச்சலான ஊடகவியலாளர், அரசியல்வாதி மற்றும் மனித உரிமை ஆர்வலர் எனப் பலராலும் மதிக்கப்படும் லசந்தவின் படுகொலைச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் இன்றும் ஊடகத்துறையினர் மத்தியில் பேசப்படும் முக்கிய விடயமாக உள்ளது.
இந்த அரசாங்கம் முன்னைய பல ஊடகவியலாளர்களின் கொலைகள் பற்றிய விசாரணைகள் வெளிப்படையாக முன்னெடுக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படும் என வாக்குறுதியளித்திருக்கும் நிலையில் அது பற்றியும் இன்று வெலியுறுத்தப்பட்டது.


