திருவண்ணாமலையில் யாழ்ப்பாணம் சைவப்பிரகாசப் பேரவையின் ஏற்பாட்டில் திருவாசகம் முற்றோதல்!
யோகர் சுவாமிகளின் குருபூசை நட்சத்திரமான ஆயிலிய நட்சத்திர தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் சைவப் பிரகாசப் பேரவையின் ஏற்பாட்டில் தித்திக்கும் திருவாசகம் முற்றோதல் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (06.01.2026) திருவண்ணாமலையிலுள்ள அருணகிரிநாதர் திருமடத்தில் மிகவும் பக்திபூர்வமாக இடம்பெற்றது.
யோகர் சுவாமிகள் அருளிய நற்சிந்தனைப் பாராயணம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சாதுக்களுக்கு அன்னதானமும் பரிமாறப்பட்டது.


