நகர அபிவிருத்தி அதிகார சபையின் திட்டங்கள் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்..!
நகர அதிருப்தி அதிகார சபையின் திட்டங்கள் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (02.01.2026) காலை
10.30 மணிக்கு மாவட்ட செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
நகர அபிவிருத்தி அதிகார சபையினால் 2026 ஆம் ஆண்டு 200 மில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்கள் தொடர்பாக பங்குதாரர்களுடனான கலந்துரையாடலை மேற்கொள்ளல் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்டவுள்ள திட்டங்கள் தொடர்பாக ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக உள்ளூராட்சி சபை பிரதிநிதிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துதல் தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளின் முன்னாயத்த கலந்துரையாடலாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
இக் கலந்துரையாடலில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் திரு டி.பி.எஸ்.கே டிசநாயக்க, பிரதிப் பணிப்பாளர் திருமதி கவிதா ஜீவகன், உதவி பணிப்பாளர் திருமதி எஸ் தாரணி, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இ. சுரேந்திரன்நாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

