கண்டாவளை பிரதேச செயலகத்தின் Clean Sri Lanka திட்டத்தின் இரண்டாவது நடமாடும் சேவை..!
ஜனாதிபதி செயலகத்தின் வழிகாட்டலில் Clean SriLanka நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவின் இரண்டாவது நடமாடும் சேவை இன்று(02.01.2026) நடைபெற்றது.
குறித்த நடமாடும் சேவை கண்டாவளை பிரதேச செயலாளர் த.பிருந்தாகரன் தலைமையில் கல்லாறு தமிழ் வித்தியாலயத்தில் நடைபெற்றது.
இந்த நடமாடும் சேவையில் மக்கள் ஒரே நாளில் சிறப்பான பயனை பெற்றுக்கொண்டனர்.
குறிப்பாக பிறப்பு, இறப்பு மற்றும் உத்தேச வயது சான்றிதழ்கள் தொடர்பான சேவைகள், ஆட்களைப் பதிவுசெய்யும் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள் (தேசிய அடையாள அட்டை), ஓய்வூதியம் தொடர்பான சேவைகள், மோட்டார் வாகன பதிவு மற்றும் வாகன வருமான அனுமதிப்பத்திரம் தொடர்பான சேவைகள், வியாபார பெயர்ப் பதிவு தொடர்பான சேவைகள், காணி தொடர்பான சேவைகள், சமூக சேவைகள் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள், நலன்புரி நன்மைகள் தொடர்பான சேவைகள், முதியோர் தேசிய செயலகத்தினால் வழங்கப்படும் சேவைகள், சிறுவர் பெண்கள் உரிமைகள் தொடர்பான சேவைகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரிவு தொடர்பான சேவைகள், திறன் அபிவிருத்தி தொடர்பான சேவைகள் மற்றும் தொழிற்கல்வி வழிகாட்டல்கள், மனிதவள அபிவிருத்தி தொடர்பான சேவைகள் மற்றும் தொழில் வழிகாட்டல்கள், கைத்தொழில் திணைக்களம் தொடர்பான சேவைகள், கிராம அபிவிருத்தி பிரிவு தொடர்பான சேவைகள், சமய, கலாசாரப்பிரிவு தொடர்பான சேவைகள், சொத்தழிவு/காணாமல் போனோர் தொடர்பான சேவைகள், சமுர்த்தி கடன் சேவைகள், பிரதேச சபைகளால் வழங்கப்படும் சேவைகள், கமநல அபிவிருத்தி திணைக்களம் தொடர்பான சேவைகள், ஆயுள்வேத திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள், விவசாயத் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள்,கால்நடை அபிவிருத்தித் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள், மின்சார சபை தொடர்பான சேவைகள், நீர் வழங்கல் அதிகார சபை தொடர்பான சேவைகள், தென்னைப் பயிர்ச் செய்கை சபை தொடர்பான சேவைகள், பொலிஸ் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள், தொழில் திணைக்களத்தால் வழங்கப்படும் சேவைகள், நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையால் வழங்கப்படும் சேவைகள், ஏனைய திணைக்களங்களினால் வழங்கப்படும் சேவைகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பொதுமக்கள் ஒரே இடத்தில் இலகுவாக பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் குறித்த நடமாடும் சேவை நடைபெற்றிருந்தது
இந் நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன்,மாவட்ட மேலதிக அரசாங்கதிபர் நளாயினி இன்பராஜ்,மேலதிக அரசாங்கதிபர் காணி அஜிதா பிரதீபன் ,கரைச்சி பிரதேச சபை தவிசாளர், கடற்றொழில் அமைச்சரின் இணைப்பு செயலாளர் மருங்கன் மோகன், ,வடக்கு வலயத்திற்கு பொறுப்பான மேலதிக பதிவாளர் ,பிரதேச சபை உறுப்பினர்கள், கண்டாவளை பிரதேச செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், நடமாடும் சேவையுடன் தொடர்புடைய திணைக்கள தலைவர்கள், உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இவ் நடமாடும் சேவையானது ஜனாதிபதி செயலகத்தின் நிதி அனுசரணையுடன்,
தொடர்ச்சியாக பிரதேச செயலக ரீதியாக முன்னெடுக்கப்பட்டு வருவதோடு மக்களுக்கு ஒரே இடத்தில் அவர்களது பல்வேறு தேவைகளை பெற்றுக் கொள்ளக்கூடியதாக தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த நடமாடும் சேவையில் பெருந்திரளான மக்கள் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தனர்.

