வீட்டிலேயே செய்யக் கூடிய உருளைக்கிழங்கு சிப்ஸ்

வீட்டிலேயே எளிய முறையில் உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்யலாம்.

உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்து எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு – 3 கிலோ
எண்ணெய் – ஒரு கிலோ
மிளகாய் பொடி – 5 தேக்கரண்டி
பெருங்காயம் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை
உருளைக்கிழங்கின் மேல் தோலை சுரண்டி அல்லது மேலாக சீவி கழுவி வைத்து கொள்ளவேண்டும்.

பின்னர் தோல் சீவிய கிழங்கை சிப்ஸ் சீவும் கட்டை மூலம் சீவி எடுத்து சுத்தமான ஒரு மென்மையான துணியில் ஈரம்போக ஒற்றி எடுத்துக்கொள்ள வேண்டும்.

அடுப்பில் இரும்பு சட்டியில் பொரித்து எடுக்கும் அளவில் எண்ணெய் ஊற்றி காய விட வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் சீவிய கிழங்குகளை அதில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.

மிளகாய் தூள், மஞ்சள்பொடி, உப்புத்தூள் ஆகியவற்றை பொரித்து வைத்துள்ள சிப்ஸ் மீது தூவி நன்றாக கலந்து விட்டு ஆற விடவேண்டும்.

சுமார் ஒரு மணி நேரம் கழித்ததும் பாலித்தீன் பைகளில் போட்டு வைத்து 10 நாட்கள் வரை சாப்பிடலாம்

Recommended For You

About the Author: webeditor