வெளிநாட்டு உதவிகள் மூலம் “மீண்டும் இலங்கை” – Rebuilding Sri Lanka திட்டத்துக்கு $1.89 பில்லியன் திரட்டல் – நிதியமைச்சின் செயலாளர் தகவல்
நாட்டின் மறுசீரமைப்புக்காக ஆரம்பிக்கப்பட்ட “மீண்டும் இலங்கை” (Rebuilding Sri Lanka) திட்டத்திற்கு மொத்தம் 1,893 மில்லியன் ரூபாய் (189.3 கோடி) நிதியுதவி கிடைத்துள்ளதாக நிதியமைச்சின் செயலாளர் டாக்டர் ஹர்ஷன சூரியாப்பெரும தெரிவித்தார்.
வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள், நலம் விரும்பிகள், தனிநபர்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களின் பங்களிப்புகள் மூலமாக இந்த நிதி திரட்டப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டினார்.
“மீண்டும் இலங்கை” திட்டத்தின் மூலம், நாட்டின் பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டுக்கு அவசியமான கட்டமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்

