இன்று அதிகாலை 4.00 மணியளவில், பதுளை, அகிரிய, மீகொல்ல மேற்பிரிவில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது தற்போது மக்கள் மைதானமொன்றில் ஒன்றுகூடியுள்ளனர்.
அதிகாலை 4 மணியளவில் இந்த மண்சரிவு ஏற்பட்டதையடுத்து கிராம மக்கள் விளையாட்டு மைதானத்தில் ஒன்றுகூடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த மண்சரிவு காரணமாக உயிர் அல்லது சொத்து இழப்பு எதுவும் ஏற்படவில்லை என்று மீகஹாகியுல்ல பிரதேச செயலாளர் நிர்மலா குமுதுனி தெரிவித்துள்ளார்.
குறித்த பகுதியில் இருந்து மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும்,
பாதுகாப்பு மையங்களுக்குச் செல்லாத ஒரு சில குடும்பங்கள் தொடர்ந்து இங்கேயே தங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

