இலங்கையில் ஏற்பட்ட பேரிடர் சூழ்நிலைக்கு ரஷ்ய, ஒரு சிறப்பு சரக்கு விமானம் (Ilyushin IL-76) மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு 35 மெட்ரிக் தொன் உதவிப் பொருட்களை இன்று (10) மதியம் அனுப்பியது.
குறித்த விமானத்தில் ஒரு mobile power station, மரக்கறி எண்ணெய், சீனி, அரிசி மற்றும் கூடாரங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இலங்கைக்கான ரஷ்ய கூட்டமைப்பின் தூதர் லெவன் ஜார்ஜியன், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக, பாதுகாப்பு பிரதி அமைச்சர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர, விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் லிமிடெட்டின் தலைவர் ஏர் வைஸ் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம ஆகியோர் கலந்துகொண்டனர்.


