ஆலையடிவேம்பு பிரதேசசபையின் கன்னி வரவுசெலவு திட்டம் 09 உறுப்பினர்களின் வாக்குகளால் நிறைவேற்றம்.
அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான கன்னி வரவு செலவு திட்ட நிதியறிக்கை (பட்ஜெட்), பிரதேச சபையின் தவிசாளர் ஆரியதாச தர்மதாச தலைமையில் இன்று (10)காலை சமர்ப்பிக்கப்பட்ட போது, 09 வாக்குகளால் 2026ம் ஆண்டுக்கான நிதியறிக்கை பட்ஜெட் வெற்றிபெற்றுள்ளது.
இதன்போது இடம்பெற்ற வெளிப்படை வாக்கெடுப்பில் ஆதரவாக 09 வாக்குகளும், எதிராக 07 வாக்குகளும் கிடைத்தன. சபையில் இன்றைய தினம் 16 உறுப்பினர்களும் பிரசன்னமாகியிருந்ததுடன் தமிழரசுக்கட்சி, 07 பேரும் சுயேட்சைக்குழு சார்பில்(02) இருவரும் வாக்களித்ததுடன்
தேசிய மக்கள் சக்தியின் 07 பேரும் எதிராக வாக்களித்திருந்தனர்.
இன்றைய வரவு செலவு மீதான வாக்கெடுப்பின் போது ஆலையடிவேம்பு பிரதேசத்தில் அமரர் ஊர்தியினை மக்கள் பயன்பாட்டுக்கு இலவசமாக வழங்குவதென விசேட தீர்மானம் முன்வைக்கப்பட்டதுடன் சபையில் ஏகமானதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

