டொனால்ட் டிரம்பிற்கு ‘FIFA சமாதான விருது’..!

டொனால்ட் டிரம்பிற்கு ‘FIFA சமாதான விருது’..!

சர்வதேச கால்பந்து சம்மேளனத்தினால் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு ‘FIFA சமாதான விருது’ வழங்கப்பட்டுள்ளது.

2026 FIFA உலகக் கிண்ணப் போட்டிக்கான குழுக்களைத் தெரிவு செய்யும் குலுக்கல் (draw) அமெரிக்காவின் வொஷிங்டனில் (இலங்கை நேரப்படி இன்று அதிகாலை) நடைபெற்ற போதே, இவ்விருது அவருக்கு வழங்கப்பட்டது.

 

FIFA தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவினால் இவ்வருடம் முதன்முறையாக இவ்விருது அறிமுகப்படுத்தப்பட்டதுடன், அதற்கமைய அவ்விருதின் முதலாவது வெற்றியாளராக டிரம்ப் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

‘சமாதானத்திற்காக விசேட மற்றும் அசாதாரண நடவடிக்கைகளை மேற்கொண்ட’ மற்றும் ‘உலகெங்கிலும் உள்ள மக்களை ஒன்றிணைத்த’ ஒருவருக்கே இவ்விருது வழங்கப்படுகின்றது.

Recommended For You

About the Author: admin