மன்னார் கட்டுக்கரை குளத்தின் வான் பகுதி உடையும் அபாயம்..!
மன்னார் கட்டுக்கரை குளத்திற்கான நீர் வரத்து சடுதியாக அதிகரித்துள்ளமையினால், குளத்தின் வான் பகுதி சேதமடையும் அபாயம் காணப்படுவதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
நீர்ப்பாசனத் திணைக்களம் வழங்கிய தகவலுக்கமைய இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, பரப்புக்கடந்தான் மற்றும் அடம்பன் ஆகிய பிரதேசங்களின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் இது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், பாதுகாப்பு கருதி உடனடியாகப் பாதுகாப்பான இடங்களை நோக்கிச் செல்லுமாறும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

