கம்பளையில் மின்சாரம் வழமைக்கு..!
சில நாட்களுக்குப் பிறகு, கம்பளை பிரதேசத்தின் சில பகுதிகளில் மின்சாரம் வழமைக்குத் திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், தொலைபேசி தொடர்பாடல் வலையமைப்புகளைத் துரிதமாகச் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அனர்த்த நிலையைத் தொடர்ந்து நிவாரணக் குழுக்கள் கம்பளை நகரத்திற்கு வந்துள்ளதாக ‘பதிவு செய்திகள் ‘ செய்தியாளர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், நீரில் மூழ்கியிருந்த கம்பளை நகரத்தின் நீர்மட்டம் படிப்படியாகக் குறைந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

