அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் நியமனம்..!
அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகமாக பிரபாத் சந்திரகீர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
2025 ஆம் ஆண்டின் அவசரகால நிலைமை ஆணை இலக்கம் 1 இன் (பல்வேறு ஏற்பாடுகள் மற்றும் அதிகாரங்கள்) பிரிவு 11(1) விதிகளின் பிரகாரம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அத்தியாவசிய சேவைகளை வழங்குதல் மற்றும் பேணுதல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் செயல்படுத்துதல் மற்றும் ஒருங்கிணைத்தல் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்தின் பொறுப்பாகின்றது.
பிரபாத் சந்திரகீர்த்தி தற்போது பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளராகவும் பணியாற்றி வருகிறார்.

