எதிர்க்கட்சிகளின் பேரணி – ஒலிபெருக்கிகளை அகற்ற காவல்துறை உத்தரவு !!

எதிர்க்கட்சிகளின் பேரணி – ஒலிபெருக்கிகளை அகற்ற காவல்துறை உத்தரவு !!

கல்விப் பொதுத்தர உயர்தரப் பரீட்சைகள் (GCE Advanced Level Examinations) தொடர்ந்து நடைபெற்று வருவதைக் காரணம் காட்டி, நுகேகொடையில் இன்று (நவம்பர் 21) நடைபெறவுள்ள கூட்டு எதிர்க்கட்சிகளின் பேரணிக்காக வைக்கப்பட்டிருந்த ஒலிபெருக்கிகளை காவல்துறை அகற்ற உத்தரவிட்டுள்ளது. உத்தரவைத் தொடர்ந்து ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டுள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) அரசியல் அணிதிரட்டலுக்கான பிரதிச் செயலாளர் நாயகம் ஹரின் பெர்னாண்டோ இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளதுடன், ஒலிபெருக்கிகள் சற்று நேரத்துக்கு முன்னர் அகற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

எனினும் காவல்துறையின் இந்தச் செயல்பாடு குறித்துப் பேரணியின் ஏற்பாட்டாளர்கள் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

நேற்றைய தினம் (நவம்பர் 20), தங்காலையில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற முழுநாடும் ஒன்றாக, போதைப்பொருள் செயற்றிட்ட மாநாட்டில், A/L பரீட்சை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதிலும், ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தக் காவல்துறை அனுமதித்தது.

ஆனால், அதே பரீட்சைக் காலத்தைக் காரணம் காட்டி, இன்றைய எதிர்க்கட்சிகளின் பேரணிக்கு மட்டும் ஒலிபெருக்கிகளை அகற்றச் சொல்லி அழுத்தம் கொடுப்பது காவல்துறையின் இரட்டைமுகம் என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இன்று பிற்பகல் பேரணி:
கூட்டு எதிர்க்கட்சிகளின் இந்தப் பொதுக் கூட்டம் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு மிரிஹானை காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கில் நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin