உலக நீரிழிவு தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு நடைபயணம்..!

உலக நீரிழிவு தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு நடைபயணம்..!

உலக நீரிழிவு தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சை நிலையத்தின் ஒழுங்கமைப்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தி அவர்கள் தலைமையில் விழிப்புணர்வு நடைபயணம் இன்றைய தினம் (14.11.2025) காலை 06.00 மணிக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலிருந்து ஆரம்பமானது.

 

இவ் நடைபயணத்தில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன், நீரிழிவு வைத்திய நிபுணர் எஸ். அரவிந்தன், பொது வைத்திய நிபுணர் சிவன்சுதன், பொது வைத்திய நிபுணர் கேதீஸ்வரன்,

வாழ் நாள் பேராசிரியர் பொன். பாலசுந்தரம்பிள்ளை, கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலை அதிபர் செந்தமிழ் சொல்லருவி திரு. லீ. லலீசன், உயிரியல் ஆசிரியர் திரு. குணசீலன், பெளதீகவியல் ஆசிரியர் திரு. சோதிநாதன், மருத்துவர்கள். தாதியர்கள், மருத்துவ பீட மாணவர்கள், யாழ்ப்பாண மாவட்ட நீரிழிவு சங்கத்தின் தலைவர், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: admin