அனர்த்த அவசரநேர உபகரணங்கள் கடற்படைக்கு வழங்கி வைப்பு..!
வடமத்திய கடற்படை பிரிவிற்கு, அனர்த்த அவசரநேரங்களில் மக்களை பாதுகாக்கவும் மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் தேவையான அவசரகால உபகரணங்கள் இன்று(14.11.2025) காலை 10.00 மணியளவில் மன்னார் மாவட்ட செயலாளர் அவர்களின் தலைமையில், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினால் வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த நிகழ்வில் மேலதிக மாவட்ட செயலாளர், கடற்படை பொறுப்பு அதிகாரிகள், அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் மற்றும் பிற அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


