சமுர்த்தி சிறுவர் கழக உறுப்பினர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி செயலமர்வு..!

சமுர்த்தி சிறுவர் கழக உறுப்பினர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி செயலமர்வு..!

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக சமுர்த்தி பிரதேச சமுதாய அடிப்படை அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறுவர் கழக உறுப்பினர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி செயலமர்வானது இன்றைய தினம் (2025.11.11) மு.ப 9.30 மணியளவில் பிரதேச செயலாளர் திரு உ. உதயஸ்ரீதர் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழும், உதவி பிரதேச செயலாளர் திருமதி சத்தியகௌரி தரணிதரன் அவர்களின் நெறிப்படுத்தலின் கீழும் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வானது சிறுவர்களின் தலைமைத்துவ பண்புகள், சமூக பங்களிப்பு திறன்கள், பொறுப்புணர்வை மேம்படுத்தல் மற்றும் சிறுவர் உரிமைகளை பாதுகாத்தல் போன்ற நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு நடைபெற்றது.

இவ் பயிற்சி செயலமர்வின் வளவாளர்களாக பிரதேச செயலக சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்களான திரு எம்.புவிதரன் மற்றும் திரு எஸ்.சத்திநாயகம், பிரதேச சிறுவர் நன்னடத்தை பாதுகாப்பு உத்தியோகத்தர் திருமதி. த. அஜந்தா, அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு கே.கலாமேகன் ஆகியோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு நிகழ்வு மற்றும் விளையாட்டுகளுடாக சிறப்பான முறையில் செயலமர்வினை நடாத்தியிருந்தனர்.

இந் நிகழ்வில் தலைமையக முகாமையாளர் திருமதி புவனேஸ்வரி ஜீவகுமார், முகாமைத்துவப் பணிப்பாளர் திரு.கே.உதயகுமார், சமூக அபிவிருத்தி உதவியாளர் திரு.தெ.உதயசுதன், சமுதாய அடிப்படை அமைப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.பி.ஜசோபனா, சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச சமுதாய அடிப்படை அமைப்பு உறுப்பினர்கள், சிறுவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Recommended For You

About the Author: admin