சரித ரத்வத்தே பிணையில் விடுவிப்பு..!

சரித ரத்வத்தே பிணையில் விடுவிப்பு..!

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த நிதி அமைச்சின் முன்னாள் செயலாளர்களில் ஒருவரான சரித ரத்வத்தேவை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (04) உத்தரவிட்டது.

 

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் சந்தேகநபரின் சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களைக் கருத்தில் கொண்ட கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

 

சந்தேகநபரை தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுதலை செய்ய நீதவான் உத்தரவிட்டார்.

 

சந்தேகநபரின் வெளிநாட்டுப் பயணங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதுடன், அவரது கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

 

மேலும், சந்தேகநபர் சாட்சிகளுக்கு அழுத்தம் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும் எனவும் மற்றுமொரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

அதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணையை ஜனவரி மாதம் 23 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக நீதிமன்றம் அறிவித்தது.

Recommended For You

About the Author: admin