சற்று முன்னர் கனடாவில் இருந்து இலங்கை வந்தவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது..!

சற்று முன்னர் கனடாவில் இருந்து இலங்கை வந்தவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது..!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பெருந்தொகை போதைப்பொருட்களுடன் கனடா பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது நடவடிக்கை இன்று (28.10.2025) காலை இடம்பெற்றுள்ளது.

 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 21 வயதான கனேடிய பிரஜை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

விமான நிலையத்திலிருந்து போதைப்பொருளை எடுத்துச் செல்ல முயன்றபோது, ​​சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

சந்தேக நபரின் பயணப்பெட்டியில் 6 பொலித்தீன் பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 18 கிலோகிராம் 253 கிராம் எடையுள்ள 72 சிறிய ஹஷிஷ் பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

 

இந்தப் ஹஷிஷ் போதைப்பொருட்களின் பெறுமதி சுமார் 182.5 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

 

கைது செய்யப்பட்ட சந்தேக நபரும் போதைப்பொருள் கையிருப்பும் மேலதிக விசாரணைக்காக விமான நிலையப் போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய சுங்கம் தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: admin