தமிழர் பகுதியில் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பாக அதிரடி நடவடிக்கை..!
கிளிநொச்சி – தர்மபுர பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட புன்னைநீராவி கிராம அலுவலர் பிரிவில் விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த நடவடிக்கை நேற்றைய தினம் (27.10.2025) அதிகாலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தர்மபுரம் பொலிஸார் மற்றும் விமானப்படையினர் இணைந்து சட்டவிரோத போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் போது மோப்பநாய் சகிதம் பல வீடுகளில் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது சட்டவிரோத கசிப்பு 40 லீட்டருடன் சந்தேகநபர் ஒருவரும், அதேபகுதியில் 5.50 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவரும், 5.1 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஆண் ஒருவரும் சிக்கியுள்ளார்.
இவர்களிடமிருந்து 16,500 பணமும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் கிளிநொச்சி நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

