வடக்கில் தொடரும் குளறுபடி ..!
அதிபர் சேவைக்கு உள்ளீர்க்கப்பட்டவருக்கு ஆசிரியர் இடமாற்றம்.
வடக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றப் பட்டியலில் அதிபர் சேவைக்குள் உள்ளீர்க்கப்பட்டு அதிபராக பணியாற்றும் ஒருவரின் பெயர் இடம்பெற்றுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கிளிநொச்சி கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றின் அதிபராக அதிபர் சேவைக்குள் உள்ளீர்க்கப்பட்ட ஒருவரின் பெயரே இவ்வாறு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவது, ”ஏற்கனவே அதிபர் சேவைக்கு உள்ளீர்க்கப்பட்ட ஒருவரை 2026ஆம் ஆண்டு நடைமுறைக்கு வரும் வகையில் வட மாகாண கல்வி அமைச்சினால் வழங்கப்படும் இடமாற்றப் பட்டியலிலும் அவரது பெயர் இடம்பெற்றுள்ளது.
இந்தநிலையில் அதிபர் சேவைக்கு உள்ளீர்க்கப்பட்டவரின் பெயர் எவ்வாறு ஆசிரியர் இடமாற்றப் பட்டியலில் உள்ளடக்கப்படும் என பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை ஆசிரியர் இடமாற்றத்தில் முறைகேடுகள் இருப்பதாக கூறி அண்மையில் வடமாக ஆளுநர் செயலகத்துக்கு முன்னால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் போராட்டத்தை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

