பாகிஸ்தானின் வான்வழித் தாக்குதலில் 3 ஆப்கான் கிரிக்கெட் வீரர்கள் உட்பட 8 பேர் பலி……

பாகிஸ்தானின் வான்வழித் தாக்குதலில் 3 ஆப்கான் கிரிக்கெட் வீரர்கள் உட்பட 8 பேர் பலி……

பாகிஸ்தான் எல்லைக்கு அருகே நடந்த வான்வழித் தாக்குதலில் 3 ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து, அடுத்த மாதம் பாகிஸ்தான் மற்றும் இலங்கையுடன் நடைபெறவிருந்த முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இருந்து விலகுவதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை (ACB) அறிவித்துள்ளது.

வீரர்கள் நட்பு போட்டியொன்றில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் எல்லையில் உள்ள கிழக்கு பக்திகா மாகாணத்தில் உள்ள உர்குனிலிருந்து ஷரானாவுக்கு பயணித்ததாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை (ACB) தெரிவித்துள்ளது.

“உர்குனில் உள்ள தங்கள் வீட்டிற்குத் திரும்பிய பின்னர், அவர்கள் ஒன்று கூடல் ஒன்றின் போது குறிவைக்கப்பட்டனர்” என்று தெரிவித்த ACB, அதனை “பாகிஸ்தான் ஆட்சியால் மேற்கொள்ளப்பட்ட கோழைத்தனமான தாக்குதல்” என்று விபரித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை, கொல்லப்பட்ட மூன்று வீரர்களையும் கபீர் (Kabeer), சிப்கத்துல்லா (Sibghatullah) மற்றும் ஹாரூன் (Haroon) எனப் பெயரிட்டுள்ளதுடன், இந்தத் தாக்குதலில் மேலும் ஐந்து பேர் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

இருப்பினும், சில ஊடக அறிக்கைகளின்படி, கிரிக்கெட் வீரர்கள் உட்பட எட்டு பேர் கொல்லப்பட்டதாகவும், நான்கு பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin