யாழ் போதனா வைத்தியசாலையின் 175 ஆண்டு நிறைவையொட்டி முத்திரை வெளியீடும் உப தபால் அலுவலகம் திறப்பும்..!
யாழ்ப்பாண வைத்தியசாலையின் 175 ஆண்டு நிறைவையொட்டி முத்திரை வெளியீடும் உப தபால் அலுவலகம் திறப்பு நிகழ்வும் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி தலைமையில் இன்றைய தினம் (18.10.2025) யாழ்ப்பாண தாதியர் பயிற்சி கல்லூரியில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தென்னிந்திய திருச்சபை முன்னாள் பேராயர் வணக்கத்துக்குரிய எஸ் ஜெபநேசன் அடிகளாரும் தெல்லிப்பளை ஸ்ரீதுர்க்கா தேவி தேவஸ்தான தலைவர் கலாநிதி ஆறு. திருமுருகன் அவர்களும் மற்றும் அருட்தந்தை ஜெபரட்ணம் அடிகளார் அவர்களும் கலந்து கொண்டதோடு பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், சன்முகநாதன் ஸ்ரீபவானத்தராஜா, ஜெயசந்திரமூர்த்தி ரஜீவன், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன், உதவி தபால் அத்தியட்சகர், வட பிராந்திய பிரதி தபால்மா அதிபர், வைத்திய நிபுணர்கள் வைத்தியர்கள் தாதியர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .


