மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் மகிழ்ச்சித் தகவல்..!
அடுத்த கல்வி ஆண்டில் தரம் 1 மற்றும் தரம் 6 மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படாது என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
இதன்படி தரம் 1 தரம் 6 மாணவர்களுக்கு சுய கற்றல் கையேடுகள் வழங்கப்படும் என கல்வி பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சுய கற்றல் கையேடுகள் தற்போது அச்சிடப்படுகின்றன.
இதனால் இந்தத் தரங்களில் கற்கும் மாணவர்களுக்கான புத்தகப்பைகளின் எடையும் குறைக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, இலங்கையின் மத்திய மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 21ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பண்டிகைக்கு மறுநாளான 21 ஆம் திகதி விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மத்திய மாகாண ஆளுநரால் குறித்த விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

