காணி வாங்க, விற்க என்று வரும்போது எம் பலருக்கும் தெரிந்த தெரியாத நில அளவுகள் இவை.
நில அளவு பற்றி தெரிந்து கொள்ளுங்கள் என்று X தளத்தில் காணப்பட்ட பதிவு இது (மஞ்சள் படம்)
பொதுவாக தமிழ்நாட்டில் அதிகம் பயன்படுத்தப்படும் நில அளவுகள்.
இலங்கையில் பயன்படுத்தப்படும் பரப்பு என்ற அலகு இதில் இல்லாதிருந்ததால் அதைத் தேடி அதையும் சேர்த்தே பதிந்திருக்கிறேன்.
1. ஹெக்டேருக்கான (Hectare) அளவு
ஒரு பரப்பு என்பது சுமார் 0.0253 ஹெக்டேருக்கு (Hectare) சமமாகும்.
1 பரப்பு≈0.0253 ஹெக்டேர்
(குறிப்பு: 1 ஹெக்டேர் என்பது 2.47 ஏக்கர் ஆகும். இந்த அடிப்படையில், 1 ஹெக்டேர்≈39.57 பரப்பு ஆகும்.)
2. சதுர கிலோமீட்டருக்கான (Square Kilometer) அளவு
ஒரு சதுர கிலோமீட்டர் என்பது 100 ஹெக்டேருக்கு சமம் என்பதால், ஒரு பரப்பு என்பது மிகச் சிறிய அலகாகும்.
1 பரப்பு≈0.000253 சதுர கிலோமீட்டர்
கூடுதல் விளக்கங்களுக்கான மாற்றங்கள்
பரப்பு என்ற அலகானது, வழக்கமான இம்பீரியல் அலகுகளைப் பயன்படுத்தி வரையறுக்கப்படுகிறது. இவை பொதுவாகப் பின்வரும் அளவுகளுக்குச் சமமாக இருக்கும்


