ஜனாதிபதி மாளிகைகளை பராமரிப்பதற்காக செலவிடப்பட்ட பெரும் தொகை பணம்..!

ஜனாதிபதி மாளிகைகளை பராமரிப்பதற்காக செலவிடப்பட்ட பெரும் தொகை பணம்..!

நாட்டின் எட்டு ஜனாதிபதி மாளிகைகளைப் பராமரிப்பதற்காக, கடந்த 2024ஆம் ஆண்டில் மாத்திரம் எட்டு கோடியே ஒரு இலட்சத்து ஐம்பத்து நாலாயிரத்து நானூற்று இருபத்திரண்டு ரூபா (ரூ. 80,154,422) செலவிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

ஜனாதிபதி செயலகத்தின் 2024ஆம் ஆண்டுக்கான வருடாந்த செயலாற்றுகை அறிக்கையில் உள்ள கணக்காய்வு அறிக்கையில் இந்தத் தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

 

இந்த எட்டு மாளிகைகளிலும் 392 பாதுகாப்புப் பிரிவினர் மற்றும் 16 சிவில் ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 

இதில், 16 சிவில் ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளுக்காக கடந்த 2024ஆம் ஆண்டில் ஒரு கோடியே முப்பத்தேழு இலட்சத்து நாற்பத்தோராயிரத்து என்பது ரூபா (ரூ. 13,741,080) செலவிடப்பட்டுள்ளது.

 

இந்த ஜனாதிபதி மாளிகைகள் யாழ்ப்பாணம், அநுராதபுரம், கண்டி, மஹியங்கனை, நுவரெலியா, கதிர்காமம், பெந்தோட்டை, மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளில் அமைந்துள்ளன.

Recommended For You

About the Author: admin