வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம் இலங்கை மக்களுக்கு கடும் எச்சரிக்கை..!

வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம் இலங்கை மக்களுக்கு கடும் எச்சரிக்கை..!

இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இன்று(06.10.2025) பிற்பகல் 1 மணிக்கு பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன்படி, வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 50 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

 

அத்துடன், மேற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலையில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், நிலவும் சீரற்ற காலநிலையில் போது, அபாயத்தைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin