சட்டவிரோத கட்டிடங்களுக்கு வடமராட்சி கிழக்கில் சிவப்பு எச்சரிக்கை..!

சட்டவிரோத கட்டிடங்களுக்கு வடமராட்சி கிழக்கில் சிவப்பு எச்சரிக்கை..!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் சில பிரதேசங்களில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு சிவப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது

வத்திராயன், மருதங்கேணி, உடுத்துறை ஆகிய பகுதிகளில் பிரதேச சபையின் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்களுக்கு எதிராக பருத்தித்துறை பிரதேச சபையால் சிவப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது

அதில் பிரதேச சபையின் அனுமதியின்றி தங்களால் மேற்கொள்ளப்படும் கட்டுமான பணிகளை உடன் நிறுத்தவும். மீறினால் சட்ட நடவடிக்கைக்கு உட்படுவீர்கள் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

பருத்தித்துறை பிரதேச சபையின் தவிசாளர் உதயகுமார் யுகதீஸ் அவர்களின் உத்தரவின் பேரில் இந்த சிவப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது

Recommended For You

About the Author: admin