யாழ் சர்வதேச வர்த்தக கண்காட்சி 2026: வடக்கின் பொருளாதாரத் திருவிழா

யாழ் சர்வதேச வர்த்தக கண்காட்சி 2026: வடக்கின் பொருளாதாரத் திருவிழா

“பொருளாதார முன்னேற்றத்திற்கான வடக்கின் நுழைவாயில்” எனும் தொனிப்பொருளில், யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக கண்காட்சி 2026 இன்று உற்சாகமாக ஆரம்பமாகியுள்ளது.

யாழ். கோட்டைக்கு அருகிலுள்ள முற்றவெளி மைதானத்தில் இன்று ஆரம்பமான இக்கண்காட்சி, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 25) வரை நடைபெறவுள்ளது.

400-க்கும் மேற்பட்ட காட்சிக்கூடங்கள் (Stalls) அமைக்கப்பட்டுள்ள நிலையில் சுமார் 78,000 பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விவசாயம், அதிநவீன தொழில்நுட்பம், கல்வி, நவநாகரிகம், உணவு மற்றும் விருந்தோம்பல் போன்ற பல்துறைகளின் தயாரிப்புகள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.

நுண்ணிய மற்றும் சிறு தொழில் முயற்சியாளர்களின் வளர்ச்சிக்காக இலவச இட ஒதுக்கீடுகள் மற்றும் குறைந்த விலையிலான காட்சிக்கூடங்கள் இம்முறை விசேடமாக வழங்கப்பட்டுள்ளன.

மேலும் தென்னிலங்கை மற்றும் சர்வதேச வர்த்தகர்களுடன் வடபகுதி வர்த்தகர்கள் தொடர்புகளை ஏற்படுத்தவும், நவீன தொழில்நுட்பங்களை அறிந்துகொள்ளவும் இது ஒரு பாலமாக அமைகிறது

நுழைவுக்கட்டணமாக ஒரு நபருக்கு 200 ரூபாய் அறவிடப்படுகின்றது. வடக்கின் உற்பத்திகளை உலகிற்கு அறிமுகப்படுத்தி, பிராந்திய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதே இதன் நோக்கமாக உள்ளது.

Recommended For You

About the Author: admin