உக்ரைன் போருக்காக தங்கம் முழுவதையும் கரைக்கிறதா ரஷ்யா?
ரஷ்யாவின் ‘தேசிய நல நிதியத்தில்’ (National Wealth Fund) இருந்த தங்கம் கடந்த மூன்று ஆண்டுகளில் 71 சதவீதம் குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மே 2022-ல் 554.9 மெட்ரிக் டன் ஆக இருந்த தங்க இருப்பு, ஜனவரி 2025 நிலவரப்படி வெறும் 160.2 மெட்ரிக் டன் ஆக சரிந்துள்ளதாக கூறப்படுகிறது.
காரணம் உக்ரைன் போர்ச் செலவுகள், பட்ஜெட் பற்றாக்குறை, அரசு வங்கிகளை முட்டுக் கொடுத்து நிறுத்துதல் மற்றும் பெரிய உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக இந்த நிதி பயன்படுத்தப்பட்டுள்ளதாக கரதப்படுகிறது.
2026-ம் ஆண்டின் தொடக்கத்தில், எண்ணெய் மற்றும் எரிவாயு வருவாய் குறைந்ததால், ஒரு நாளைக்கு சுமார் 12.8 பில்லியன் ரூபிள் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெளிநாட்டு நாணயங்களை ரஷ்யா மிக வேகமாக விற்பனை செய்து வருகிறது.
மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளால் ரஷ்யாவின் வெளிநாட்டு சொத்துக்கள் முடக்கப்பட்ட நிலையில், தங்கம் மட்டுமே அவர்களுக்கு கைவசம் இருந்த “அவசரக்கால நிதி” ஆகும். ஆனால், தற்போது அந்த இருப்பும் மிக வேகமாக கரைந்து வருவது ரஷ்ய பொருளாதாரத்திற்கு நீண்டகால சிக்கல்களை ஏற்படுத்தலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இருப்பினும், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்து வருவது ரஷ்யாவிற்கு ஒரு வகையில் ஆறுதலாக உள்ளது. குறைந்த அளவு தங்கம் இருந்தாலும் அதன் மதிப்பு (டாலர் மதிப்பில்) அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.


