யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சிநெறி..!
சமூக ஒற்றுமைக்கான பொறுப்பான டிஜிட்டல் சமூகம் எனும் திட்டத்தின் கீழ் ஊடகவியலாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சிநெறி
UNICEF நிதியுதவியுடன் SOND நிறுவனம் நடைமுறைப்படுத்தியிருந்தது.
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் கடந்த 21.01.2026 புதன்கிழமை நடைபெற்ற இச் செயலமர்வு SOND நிறுவன நிறைவேற்றுப்பணிப்பாளர் திரு.ச.செந்துராசா அவர்களின் அறிமுக உரையுடன் ஆரம்பமாகியது. மேற்படி செயலமர்வில் பேராசிரியர் எஸ்.ரகுராம் வளவளாராக இணைந்து கொண்டு பொறுப்பான டிஜிட்டல் பாவனை தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு தெளிவூட்டியிருந்தார்.
இச் செயலமர்வில் வடமாகாணத்தின் 5 மாவட்டங்களையும் சேர்ந்த ஊடக மைய பிரதிநிதிகள் மற்றும் வெவ்வேறு ஊடகங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது


