வரணியில் 4வீதிகள் புனரமைப்பு..!
2025ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத்திட்டம் மூலம் வரணிப் பிரதேசத்தில் நான்கு வீதிகள் புனரமைக்கப்பட்டிருப்பதாக சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் பொ.குகதாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;
வரணிப் பிரதேசத்தில் சிமிழ் கண்ணகை அம்மன் கோவில் வீதி மூன்று மில்லியன் ரூபாய் செலவிலும்,கும்பிட்டான் புல ஆலய வீதி மூன்று மில்லியன் ரூபாய் செலவிலும்,இடைக்குறிச்சி -மாசேரி ஊரெல்லை வீதி நான்கு மில்லியன் ரூபாய் செலவிலும் மற்றும் வரணி ஆழ்வார் மட வீதி 4மில்லியன் ரூபாய் செலவிலும் சபை நிதியில் புனரமைக்கப்பட்டுள்ளன.
அதனைவிட உலக வங்கி ஊடான நிதி மூலம் கலைவாணி வீதி மற்றும் வரணி பாடசாலை அருகாமை வீதி ஆகியன காபெட் வீதிகளாக புனரமைக்கப்படவுள்ளன.
மேலதிகமாக அம்மாகடை வீதி முதலாம் குறுக்குத் தெரு ஒன்பது இலட்சம் ரூபாய் செலவில் கிரவல் வீதியாக புனரமைக்கப்பட்டுள்ளது.
வீதி அபிவிருத்தி அதிகாரசபை அன்பளிப்பாக வழங்கிய கிரவல் மூலமும் வரணியில் நான்கு வீதிகள் கிரவல் வீதிகளாக புனரமைக்க எதிர்பார்த்துள்ளோம்.
நாவலடிப் பிள்ளையார் வீதி,ஆழ்வார் மட வீதி,மாசேரி-இடைக்குறிச்சி ஊரெல்லை வீதி,மாணிக்கவாசகர் வீதி ஆகியன மேற்படி கிரவல் ஊடாக புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அது தொடர்பில் களதரிசிப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுத்திருப்பதாக மேலும் அவர் தெரிவித்திருந்தார்.

