தென்மராட்சி பகுதியில் இரண்டு சுற்றுலாத்தளங்கள் நிறுவ முயற்சி..!
தென்மராட்சிப் பகுதியில் இரண்டு சுற்றுலாத்தளங்களை ஏற்படுத்த தென்மராட்சி அபிவிருத்திக் கழகம் பிரதேசசபையிடம் கோரிக்கை ஒன்றினை முன்வைத்திருப்பதாக பிரதேசசபைத் தவிசாளர் பொ.குகதாசன் தெரிவித்துள்ளார்.
பிரதேசசபையின் மாதாந்த அமர்வின் போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;
சரசாலை குருவிக்காடு மற்றும் கச்சாய் சாலம்பன்தீவு ஆகியவற்றை சுற்றுலாத்தளங்களாக மாற்றி அபிவிருத்தி செய்ய முடியும் என தென்மராட்சி அபிவிருத்திச்சங்கம் கோரியுள்ளது.என்றார்.
இதன்போது கச்சாய் சாலம்பன் தீவில் ஆலயம் இருப்பதால் அப்பகுதியை சுற்றுலா தளமாக மாற்ற அப்பகுதி மக்கள் விரும்பமாட்டார்கள் என சபை உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

