காத்தான்குடி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் உலக சிறுவர் தின நிகழ்வு..!
“உலகை வழி நடத்த அன்பால் போஷியுங்கள்” எனும் தொனிப்பொருளில் காத்தான்குடி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் உலக சிறுவர் தின நிகழ்வு இன்று ( 01) புதிய காத்தான்குடி அல்- இக்பால் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
காத்தான்குடி பிரதேச செயலாளர் நிஹாறா மஹ்ஜூத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்,
உதவிப் பிரதேச செயலாளர் எம்.எஸ். சில்மியா, நிருவாக உத்தியோகத்தர் எம். ரஊப், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் தனூஜா, பாடசாலை அதிபர் வீ.டி.எம் ஹனீபா, சமுர்த்தி தலைமையக முகாமையாளர் பத்மா ஜெயராஜ், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் ஆர்.வாமதேவன், கருத்திட்ட முகாமையாளர் சுபந்தினி கண்ணன், சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கி முகாமையாளர்கள், சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மட்டக்களப்பு மத்தி கல்வி வலய ஆசிரிய ஆலோசகர்களான எம்.ஆர்.ஜவாத், ஏ.எல்.பாயிஸ், தஸ்லீமா றிஸ்வி, இக்பால் வித்தியாலய ஆசிரியர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், பாடசாலையில் இடம்பெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசில்களும் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


