திமுக வின் கட்டமைக்கப்பட்ட பாசிசத்தை கட்சி ஆரம்பித்து ஓரிரு நாட்களிலேயே பார்த்து அதிர்ந்து போய்ப் பின் வாங்கினார் ரஜினி.
கமல் தேர்தலில் நின்று தோற்ற பின் தான் அதை கண்டு மிரண்டு கடைசியில் அங்கேயே சரணாகதி ஆகித் தப்பித்துக் கொண்டார்.
இருவரும் எடுத்த முடிவினால் அவர்களைத் திமுக பாசிசம் நடிகர்களாக மட்டும் பிழைத்துக் கொள்ள அனுமதித்தது.
ஆனால் விஜய்க்கு அதன் பாசிசக் கட்டமைப்பைப் புரிந்து கொண்டு சரணடையக் கூட வாய்ப்பளிக்காமல் ‘உயிர்ப்பலி’யுடன் அவரது அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்தது மட்டுமல்ல அவர் ஒரு ‘நடிகராகக்’ கூட நீடித்து நிற்க முடியாதவாறு கருவறுத்திருக்கிறது திமுக பாசிச வலையமைப்பு.
இனி நேரில் மட்டுமல்ல திரையில் கூட ஒருத்தனும் முதலமைச்சர் கனவு காணக் கூடாதவாறு வேரறுத்திருக்கிறது பாசிசம்.
ஏனென்றால் அது நடிகர் உதயநிதி, விரைவில் திரையில் தோன்றவிருக்கும் ‘இன்பநிதி’ கள் மட்டுமே காண வேண்டிய கனவு.
மற்றவர்கள் அதன் அருகில் வந்தால் கூட இப்படி ஆயிரம் பேரைப் பலி கொடுத்தாவது அது நிர்மூலமாக்கப்படும்.

