ரந்தெனிகலவில் பேருந்து விபத்து..!
ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் 12 பேருக்கு காயம்.
வலப்பனை-கீர்த்திபண்டாரபுர ஆடைத் தொழிற்சாலையைச் சேர்ந்த தனியார் பேருந்து, ரந்தெனிகலவில் 36வது மற்றும் 37வது தூண்களுக்கு இடையில் விபத்துக்குள்ளானது. பேருந்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
பேருந்து சாலையில் இருந்த பாறையில் மோதியதில் அதில் பயணித்த 12 பேர் காயமடைந்து கண்டகெட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

