மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நுண்நிதி நிறுவனங்களின் சலுகைகளை பிரதேசசபை ஏற்ககூடாது..!
பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நுண்நிதி நிறுவனங்கள் தமது விளம்பரங்களை காட்சிப்படுத்துவதற்காக பிரதேசசபைக்கு வழங்கும் சலுகைகளை பிரதேசசபை ஏற்கக் கூடாது என சாவகச்சேரிப் பிரதேசசபை உறுப்பினர் செ.மயூரன் வலியுறுத்தியுள்ளார்.
அண்மையில் பிரதேசசபையில் இடம்பெற்ற மாதாந்த அமர்வின் போதே அவர் இதனை வலியுறுத்தியிருந்தார்.இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;
ஒரு சில நுண் நிதி நிறுவனங்கள் மூலம் கிராம மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் தமது விளம்பரத்தை காட்சிப்படுத்துவதற்காக அண்மையில் பிரதேசசபைக்கு 5வீதிப் பெயர் பதாகைகளை அன்பளிப்பாக வழங்கிவிட்டு அதில் தமது விளம்பரத்தையும் பொறித்திருப்பதாக அறிய முடிகிறது
மேலும் அவர்கள் தாம் அன்பளிப்புச் செய்யாத பெயர் பலகைகளில் கூட தமது விளம்பரத்தைப் பொறித்திருப்பதாக சக பிரதேசசபை உறுப்பினராகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
எனவே பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் நுண்நிதி நிறுவனங்கள் தமது வியாபார நோக்கில் ஏதேனும் அன்பளிப்புக்களை மேற்கொண்டால் அதனை பிரதேசசபை நிராகரிக்க வேண்டும். நுண்நிதி நிறுவனங்களால் பலர் உயிரிழந்துள்ளனர்.எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

