உரிய படிமுறைகள் ஊடாக தென்மராட்சிப் பிரதேச செயலகம் இரண்டாகப் பிரிக்கப்படும்..!
உரிய படிமுறைகள் ஊடாக தென்மராட்சிப் பிரதேச செயலகம் இரண்டாகப் பிரிக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினரும்-தென்மராட்சிப் பிரதேச அபிவிருத்தி-ஒருங்கிணைப்புக் குழுத்தலைவருமான க.இளங்குமரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
தென்மராட்சிப் பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டத்தின் போது பொது அமைப்புக்களுடைய பிரதிநிதிகள் தென்மராட்சிப் பிரதேச செயலக பிரிப்பு விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பிய போதே அவர் மேற்படி தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;
தென்மராட்சிப் பிரதேச செயலகத்தை இரண்டாக பிரிப்பதற்குரிய முன்நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தென்மராட்சியை இரண்டாக பிரிப்போம் என உறுதியளித்திருக்கின்றோம்.
அதனை ஒரே நாளில் நடைமுறைப்படுத்த முடியாது.
உரிய படிமுறைகள் ஊடாக அதனை நிவர்த்தி செய்வோம்.
பிரதேச செயலகத்தை இரண்டாக பிரிப்பதானால் அதற்குரிய இடத்தெரிவு,அதிகாரிகள் வெற்றிடம் ஆகியன நிரப்பப்பட வேண்டும்.எனவே உரிய படிமுறை ஊடாகவே அதனை நடைமுறைப்படுத்த முடியும் என மேலும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

