நாளை அமெரிக்கா பயணமாகும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க..!

நாளை அமெரிக்கா பயணமாகும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க..!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாளை (22.09.2025) இரவு அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையின் 80ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்ளவுள்ளதோடு மேலும் புதன்கிழமை (24) இலந்கை நேரப்படி பிற்பகல் 3.15 மணிக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் உரையாற்றுவார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

இந்த விஜயத்தின் போது, ​​ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் மற்றும் பல உலகத் தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களையும் மேற்கொள்ளவுள்ளார்.

 

இதேவேளை அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர்களுடனான சந்திப்பிலும் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத்தும் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin