மட்டக்களப்பில் மின்னல் தாக்கம்.!

மட்டக்களப்பில் மின்னல் தாக்கம்.!

மட்டக்களப்பில் மழையுடனான வானிலை ஆரம்பித்துள்ள நிலையில் இன்று (17.09.2025)ஆம் திகதி பிற்பகல் 4 மணியளவில் மகிழவட்டவான் கிராமத்தில் மின்னல் தாக்கம் ஏற்பட்டது.

பலத்த இடியுடனான மின்னல் ஏற்ப்பட்டு வளவு ஒன்றிலிருந்த வேம்பு மரத்தில் மின்னல் தாக்கியதுடன் அருகே இருந்த வீட்டில் இணைக்கப்பட்டிருந்து உயர் அழுத்த மின் இணைப்பையும் முற்றாக தாக்கி சேதமடையச் செய்துள்ளது.

 

இவ் சம்பவத்தால் எவருக்கும் எதுவித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என தெரிவிக்ப்படுகிறது.

 

இடி, மின்னல் தாக்கத்திலிருந்து பாதுகாப்பு பெறும் வழிமுறைகள்….

 

மின்னல் தாக்கும்போது, பொதுமக்கள் பாதுகாப்பான கட்டடங்களுக்குள் இருக்க வேண்டும், மரங்கள் மற்றும் உயரமான பொருட்களின் கீழ் இருக்கக் கூடாது, திறந்த வெளிகள், மைதானங்கள் மற்றும் வாகனங்களுக்குள் இருப்பதையும் தவிர்க்க வேண்டும். இடி, மின்னல் அதிகமாக இருக்கும்போது, பொது வெளிகளில் நடமாடுவதைத் தவிர்த்து, பாதுகாப்பான இடங்களுக்குச் செல்வது அவசியம்.

Recommended For You

About the Author: admin