யாழ் மாநகரசபையின் 2ஆம் வட்டாரத்தில் மேற்கொள்ளப்பட்ட சிரமதான நிகழ்வு..!

யாழ் மாநகரசபையின் 2ஆம் வட்டாரத்தில் மேற்கொள்ளப்பட்ட சிரமதான நிகழ்வு..!

உள்ளூராட்சித் திணைக்களத்தினால் யாழ்.மாவட்டத்தில் உள்ளூராட்சி வாரம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில் சபைகளினால் நடமாடும் சேவைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சிரமதானம், விளையாட்டுப்போட்டிகள் என்பன நடத்தப்பட்டு வருகின்றன.

 

இதன் ஒரு பகுதியாக யாழ்.மாநகரசபையின் 02ஆம் வட்டாரமான கந்தர்மடம் வடமேற்கு வட்டாரத்தில் அமைந்துள்ள கலட்டிச்சந்தியில் இருந்து நாச்சிமார் கோவில் வரையிலான சேர்.பொன்.இராமநாதன் வீதியின் இருமருங்கிலும் காணப்பட்ட குப்பைகள், களைகள், பாத்தீனியம் என்பன அகற்றிச்சுத்தம் செய்யும் சிரமதானநிகழ்வு 17.09.2025 புதன்கிழமை காலை 8மணியளவில் இடம்பெற்றது.

 

யாழ்.மாநகரசபையின் 02ஆம் வட்டாரமான கந்தர்மடம் வடமேற்கு வட்டாரத்தின் ஜனநாயக தமிழ்த்தேசியக்கூட்டணி உறுப்பினர் ப.தர்சானந் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதேசத்தின் கிராம அலுவலர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் யாழ்.மாநகரசபையின் வட்டார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோருடன் யாழ்.கலட்டி கலைவாணி சனசமூக நிலைய நிர்வாகிகள், ஊர்ப்பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டு பணியில் ஈடுபட்டனர்.

Recommended For You

About the Author: admin