கரைச்சி பிரதேச சபையினால் மரக்கன்றுகள் நாட்டி வைப்பு..!
“வளமான நாடும் அழகான வாழ்க்கையும் மறுமலச்சி நகரம்” என்ற தொனிப்பொருளில் உள்ளூராட்சி வாரம் நேற்றைய தினம் முதல் எதிர்வரும் 21ம் திகதி வரை தேசிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
இன்றைய இரண்டாவது நாள் சுற்றாடல் மற்றும் மரம் நடுகை தினம் ஆகும். அதற்கமைய கரைச்சி பிரதேச சபையினால் தர்மபுரம் முதல் நெத்தலியாறு பாலம் வரை மரக்கன்றுகளை நாட்டி வைக்கப்பட்டது.
குறித்த மரம் நடுகையில் கரைச்சி பிரதேச சபைத் தவிசாளர், கண்டாவளை பிரதேச செயலாளர், இராணுவத்தினர், சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினர், வனவளத்திணைக்களத்தினர், உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
நாடுபூராகவும் உள்ள 341 உள்ளூராட்சி மன்றங்களை உள்ளடக்கியதாக குறித்த வாரத்தில் சுற்றாடல் மற்றும் மரம்நடுகை , சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய, வருமான ஊக்குவிப்பு, இலக்கியம் மற்றும் கல்வி நூலகம், பொது மக்கள் பயன்பாடு மற்றும் விளையாட்டு போன்ற பல்வேறு விடயங்களை உள்ளடக்கியதாக குறித்த வாரம் செயற்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


